இன்று
இன்று
இன்று மட்டுமே நிஜம்
நேற்று என்பது போன கணக்கு
நாளை என்பது இன்றின் கனவு
விழித்து எழுந்த பின்
கனவின் இன்மை போல்
நேற்றும் நாளையும் இல்லாமல் போகுமே!!
இந்த நொடியில் வாழ்க்கை வாழு
கடந்த நொடியின் அனுபவப் படிப்பில்
அடுத்த நொடியை குழந்தை போல் எதிர்கொள்
என்றும் மகிழ்ச்சி உனதேயாகுமே!!!
தண்ணீர் சேரும் இடத்தை மேகம் அறியாது
தென்றல் அடையும் மன்றம் காற்று அறியாது
வித்து முளைவிடும் பூமியை மரம் அறியாது
உனக்கு மட்டும் தான் அடுத்த நொடி மிக்கியம்
காலம் முக்கியம் காரியம் யாவினுக்கும்
நிகழ் ஒன்றே உன் கையில்
புகழும் பெயரும் நிகழினாலன்றி
நினைவுகளால் அன்றே!!!
இன்று மட்டுமே நிஜம்
நேற்று என்பது போன கணக்கு
நாளை என்பது இன்றின் கனவு
விழித்து எழுந்த பின்
கனவின் இன்மை போல்
நேற்றும் நாளையும் இல்லாமல் போகுமே!!
இந்த நொடியில் வாழ்க்கை வாழு
கடந்த நொடியின் அனுபவப் படிப்பில்
அடுத்த நொடியை குழந்தை போல் எதிர்கொள்
என்றும் மகிழ்ச்சி உனதேயாகுமே!!!
தண்ணீர் சேரும் இடத்தை மேகம் அறியாது
தென்றல் அடையும் மன்றம் காற்று அறியாது
வித்து முளைவிடும் பூமியை மரம் அறியாது
உனக்கு மட்டும் தான் அடுத்த நொடி மிக்கியம்
காலம் முக்கியம் காரியம் யாவினுக்கும்
நிகழ் ஒன்றே உன் கையில்
புகழும் பெயரும் நிகழினாலன்றி
நினைவுகளால் அன்றே!!!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home