Thursday, December 20, 2018

பிறப்பின் பயனென்ன
பிறவாமை ஒன்று தானே?

துறப்பின் பயனென்ன
துறந்தமை தெரியாதிருப்பது தானே?

கறந்த பாலின் நீர்மை போல்
நீர்த்துப் போகும் வாழ்வினிலே
முதலாய் இருந்ததெல்லாம்
முடியாமல் போனபின்னே
முடியை மழித்தல் மட்டும்
முற்றும் துறத்தல் ஆகிடுமோ??

அகம் துறக்க இயலாது
புறம் துறக்க முயல்வதனால்
அறம் துறந்த நிலை வந்து
சிரம் தாழ்ந்து போய்விடுமே!!!

எல்லாம் இருக்க ஏதும் வேண்டாது
எல்லாம் முடிய ஏதும் முயலாது
நானுக்கும் எனக்கும் மதிப்புகள் அழித்து
எல்லாம் நானே என்னுள் அனைத்துமே

என்றே உணர்ந்து
துறக்கும் துறப்பே
துறப்பில் சிறந்ததென்று
உணர்தினான் ஆசானே!!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home