குரு ஸ்துதி அஞ்ஞானத் திரையகற்றி, என்னுள்ளே ஒளியேற்றி பிறப்பும் இறப்பும் இல்லா புண்ணியனாய் என்னை எனக்கறிவித்த வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி
மாயாப் ப்ரபஞ்சத்தில் மயங்கியே அனாதி காலமாய் வீணே பிறவி கழித்திருந்தேன், தானே கொண்ட தயையாலே எனை ஏற்ற என் குருவே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி
மறையறியேன், மறையறியும் முறையுமறியேன், திரையறியேன் திரைக்குள் ஒளிர்ந்த சுடரரியேன் என் இதயக்குகையில் இருட்டகற்ற இசைந்த தாயே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி
கன்றின் பசியறிந்த தாய் போலே எந்தன் பசியறிந்து பரிந்தே புகட்டிடுவாய் ஒன்றே பொருளென்று ஓராயிரம் யுக்தியுடன் நன்றே விளங்க வைத்த ஞான பிதா, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி
அனுபவங்கள் அனைத்தும் மாயை பிறவி மாயை, பிறந்தபின் பார்க்கும் பிறவெல்லாமும் மாயை மாறாத சத்யம் எதுவென்று விளங்க வைக்க ஸ்ருதியுக்த்தி அனுபவங்கள் பரிந்தேயுரைத்த வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி
ஒன்றே உளது அது நீயேயென்று ஓங்கி உரைத்த உத்தம குருவே நன்றே தெளிந்தென் சிந்தையுள் விளங்கி ஒங்காரமாய் நிற்கும் ஐயனே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home